ஹாக்கி

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு + "||" + Men's hockey team National Training Camp Selection of 55 players

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு

ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு
ஆடவர் ஹாக்கி அணி தேசிய பயிற்சி முகாமுக்கு 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு

ஹாக்கி இந்தியா சார்பில் பெங்களூரு சாய் பயிற்சி மையத்தில் தேசிய பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்பட 55 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சர்தார் சிங் அணியில் இடம்பெறவில்லை. பதக்கம் எதுவும் வெல்லாமல் 4-வது இடத்தையே இந்திய ஆடவர் அணி பெற்றிருந்தது.

இந்த நிலையில் ரமன்தீப் சிங், சுரேந்தர் குமார், பீரேந்திர லக்ரா, திப்சன் டிர்கி, நீலம் சஞ்சீவ், ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களும் தேசிய முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் மார்ஜின், "காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு பாடங்களை கற்பித்துள்ளது.

வருங்காலத்தில் அணியை தயார் செய்ய அவை பெரிதும் உதவும். குறிப்பிட்ட அம்சங்களில் அணியின் திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்
உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2–வது வெற்றி
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
3. ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.
4. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு
ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத்சிங் நியமனம்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது.