ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Make the Asian Champions Cup Qualifies for the Indian team final

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
5 அணிகள் இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தொடர் தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் நடந்து வருகிறது.
டோங்கா சிட்டி,

இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.  இந்திய அணியில் குர்ஜித் கவுர் 17-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 33-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 40-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

மலேசிய அணி தரப்பில் நூராய்னி ரஷித் 36-வது நிமிடத்திலும், ஹானிஸ் ஓன் 48-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள். தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்த இந்திய அணி இதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணி நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...