ஹாக்கி

ஆசிய ஹாக்கி போட்டி: இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறார் பி ஆர் ஸ்ரீஜேஷ் + "||" + Asian Games: Sreejesh to Lead Indian Hockey Team, Rupinder Returns

ஆசிய ஹாக்கி போட்டி: இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறார் பி ஆர் ஸ்ரீஜேஷ்

ஆசிய ஹாக்கி போட்டி: இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறார் பி ஆர் ஸ்ரீஜேஷ்
ஆசிய ஹாக்கி போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக பி ஆர் ஸ்ரீஜேஷ் பொறுப்பேற்கிறார். #IndianHockeyTeam #AsiaHockeyCup
இந்திய ஹாக்கி அணி காமன்வெல்த் போட்டியின் மோசமான தோல்விக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியுற்ற போதும் இந்திய அணியின் ஆட்டம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாராட்டும் படியாகவே அமைந்தது. அடுத்ததாக ஆசிய அளவிலான ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பாங் நகரில் நடக்கவிருக்கிறது. 

இந்நிலையில் ஆசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மூத்த கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சிங்க்லேசன சிங் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும் மன்ப்ரீத் சிங், சிம்ரான்ஜீத் சிங் மற்றும் விவேக் சாகர் ப்ரசாத் ஆகியோரும் அணியில் இடம் பிடித்தனர். சாம்பியன் டிராபி தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ருபிந்தர் பால் சிங் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீஜேஷ், ப்ரேடாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பெயர் விவரம் வருமாறு:- ஸ்ரீஜேஷ் (கேப்டன்), சிங்க்லேசன சிங் கன்குஜாம் (துணை கேப்டன்), மன்ப்ரீத் சிங், சிம்ரான்ஜீத் சிங், விவேக் சாகர் ப்ரசாத், ருபிந்தர் பால் சிங், க்ரிஷன் பி பதாக், ஹர்மன்ப்ரீத் சிங், வருண் குமார், பிரேந்தர லக்ரா, சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், சர்தார் சிங், எஸ் வி சிங், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், லலித் குமார் உபத்யாய், தில்ப்ரீத் சிங்