மாவட்ட ஆக்கி போட்டியில் 10 அணிகள் பங்கேற்பு


மாவட்ட ஆக்கி போட்டியில் 10 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 4 Jan 2019 6:59 PM GMT)

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஆக்கி போட்டி நேற்று நடந்தது. இதனை மாவட்ட ஆக்கிகழக செயலாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இதில் கரூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் 10 அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும். லீக் போட்டிகளின் முடிவில் புகளூர் பாரதி கிளப் அணியும், கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த இறுதிப்போட்டியில் புகளூர் பாரதி கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கலந்து கொண்டு மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பரிசுகள், சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினார்.

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் சிறப் பிடம் பெற்ற அணிகள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அழைத்து செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி செய்திருந்தார்.

Next Story