ஹாக்கி

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி: காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது + "||" + National championship championship match The Tamil Nadu team advanced to the quarterfinals

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி: காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது

தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி: காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது
தேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறி உள்ளது
.சென்னை

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது.

9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் எழும்பூரில் ‘ஜி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 5-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்தது. தமிழக அணியில் ராயர் வி.வினோத் 3 கோலும், செல்வகுமார், சண்முகம் தலா ஒரு கோலும் போட்டனர். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்த தமிழக அணி, ஐ.சி.எப். மைதானத்தில் நடந்த  4-வது லீக் போட்டியில் இமாச்சல பிரதேச  அணியை 8-2 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி 12 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.