ஹாக்கி

20 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி குவாலியரில் இன்று தொடக்கம் + "||" + National Hockey Tournament starts today in Gwalior

20 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி குவாலியரில் இன்று தொடக்கம்

20 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி குவாலியரில் இன்று தொடக்கம்
9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் (ஏ டிவிசன்) போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இன்று தொடங்குகிறது.
குவாலியர், 

9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் (ஏ டிவிசன்) போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இன்று தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் பஞ்சாப், சண்டிகார், அகில இந்திய பல்கலைக்கழகம், மும்பை, சர்வீசஸ், ‘பி’ பிரிவில் பெட்ரோலியம் போர்டு, ஏ.ஜி.அலுவலகம், அரியானா, போபால், மத்திய ரிசர்வ் போலீஸ், ‘சி’ பிரிவில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, உத்தரபிரதேசம், காங்புர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ரெயில்வே, ‘டி’ பிரிவில் ஏர் இந்தியா, ஒடிசா, நம்தாரி, கர்நாடகா, கனரா வங்கி ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.