ஹாக்கி

அஸ்லான் ஷா ஆக்கியில் தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை இன்று சந்திக்கிறது, இந்திய அணி + "||" + Azlan Shah Hocky In the opening match Japan meets today, Indian team

அஸ்லான் ஷா ஆக்கியில் தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை இன்று சந்திக்கிறது, இந்திய அணி

அஸ்லான் ஷா ஆக்கியில் தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை இன்று சந்திக்கிறது, இந்திய அணி
28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது.
இபோக்,

28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்தியா, தென்கொரியா, கனடா, ஜப்பான், போலந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.


தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை (பகல் 1.35 மணி) எதிர்கொள்கிறது. மற்ற லீக் ஆட்டங்களில் கனடா-தென்கொரியா (பிற்பகல் 3.35 மணி), மலேசியா-போலந்து (மாலை 6.05 மணி) அணிகள் மோதுகின்றன.

அதிகம் வாசிக்கப்பட்டவை