ஹாக்கி

தென்கொரியாவுக்கு எதிரான இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டி; இந்தியா வெற்றி + "||" + Bi-lateral series: Indian Women's Hockey beat S Korea 2-1

தென்கொரியாவுக்கு எதிரான இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டி; இந்தியா வெற்றி

தென்கொரியாவுக்கு எதிரான இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டி; இந்தியா வெற்றி
தென்கொரியாவில் நடந்த இருதரப்பு மகளிர் ஹாக்கி தொடக்க போட்டியில் இந்தியா 2-1 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜிஞ்சியான்,

தென்கொரிய நாட்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டிகளில் விளையாடுகிறது.  இதற்கான தொடக்க போட்டி இன்று தொடங்கியது.  இதில் இந்திய மற்றும் தென்கொரிய அணிகள் விளையாடின.

போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு தவற விடப்பட்டது.  ஆனால் 10வது நிமிடத்தில் இந்திய இளம்வீராங்கனை லால்ரெம்சியாமி கோல் அடித்தது அணியை முன்னிலை பெற செய்தது.

இதன்பின் போட்டியின் 40வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் 2வது கோலை அடித்தது இந்தியாவை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தது.  அதேவேளையில், போட்டியை நடத்தும் தென்கொரியாவுக்கு 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன.  இவற்றில் ஒரே ஒரு வாய்ப்பினை அந்த அணி 48வது நிமிடத்தில் கோலாக்கியது.  ஷின் ஹைஜியாங் அந்த கோலை அடித்த வீராங்கனையாவார்.

எனினும், இந்தியாவின் மிக சிறந்த அனுபவம் வாய்ந்த கோல்கீப்பரான சவீதா மற்ற வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியது இந்தியாவின் வெற்றி வாய்ப்பினை உறுதிப்படுத்தியது.  இதனால் தொடக்க போட்டியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  தென்கொரியாவுக்கு எதிரான 2வது போட்டி வருகிற புதன்கிழமை நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2. வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதுகிறது.
3. வெற்றி-தோல்வி இயல்பானது தேர்தல் முடிவு குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து
வெற்றி-தோல்வி இயல்பானது தேர்தல் முடிவு குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘டுவிட்டரில்’ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
4. மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
5. திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...