ஹாக்கி

இந்திய பெண்கள் ஆக்கி அணி மிகச்சிறந்த உடல் தகுதியுடன் உள்ளது - கேப்டன் ராணி ராம்பால் பேட்டி + "||" + The Indian women's hockey team is in excellent physical condition - interviewed by Captain Rani Rampal

இந்திய பெண்கள் ஆக்கி அணி மிகச்சிறந்த உடல் தகுதியுடன் உள்ளது - கேப்டன் ராணி ராம்பால் பேட்டி

இந்திய பெண்கள் ஆக்கி அணி மிகச்சிறந்த உடல் தகுதியுடன் உள்ளது - கேப்டன் ராணி ராம்பால் பேட்டி
இந்திய பெண்கள் ஆக்கி அணி மிகச்சிறந்த உடல் தகுதியுடன் உள்ளது என கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்தார்.
புதுடெல்லி,

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் ஆக்கி அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய பெண்கள் ஆக்கி அணியில் நான் பார்த்த வரையில் மிகச்சிறந்த உடல் தகுதியை கொண்ட அணியாக தற்போதைய பெண்கள் ஆக்கி அணி விளங்குகிறது. உடல் தகுதி ஆலோசகர் வாய்னே லோம்பர்ட் அனைத்து வீராங்கனைகளின் உடல் தகுதியையும் மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உடல் தகுதி ஆலோசகர் கூறியபடி நாங்கள் சத்தான உணவு பொருட்களை எடுத்து வருகிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருப்பதை எல்லோரும் பார்த்து வருகிறோம். களத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.


உடல் தகுதி ஆலோசகரின் யோசனையின் படி சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். காரம் மற்றும் ஆயில் அதிகம் கொண்ட பொருட்களை தவிர்த்து வருகிறோம். நல்ல உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருவதால் உடல் தகுதியில் சிறப்பாக இருப்பதை உணர்கிறோம். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நமது அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒலிம்பிக் தகுதி போட்டிக்காக அணி வீராங்கனைகள் அனைவரும் உத்வேகத்துடன் பயிற்சி பெற்று வருகிறார்கள். முதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய அளவுக்கு நம்மிடம் திறமை இருக்கிறது. தற்போது உலக ஆக்கியில் தரவரிசை பெரிய விஷயமல்ல. நெதர்லாந்தை தவிர்த்து எந்த அணியாலும், எந்தவொரு அணியையும் தனக்குரிய நாளில் வெல்ல முடியும்’ என்று தெரிவித்தார்.