ஹாக்கி

சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி + "||" + International hockey: Indian teams win

சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி

சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி
சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.
டோக்கியோ,

ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் நடைபெறும் ஆக்கி போட்டியில் விளையாடுகிறது. ஆண்கள் போட்டியில் ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா, இந்தியா அணிகளும், பெண்கள் போட்டியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.


இதன் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. இந்திய அணியில் மன்தீப் சிங், குர்சாஷிஜித் தலா 2 கோலும், குரிந்தர்சிங், சுனில் தலா ஒரு கோலும் அடித்தனர். பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்தது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் 9-வது மற்றும் 35-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். ஜப்பான் அணியில் அகி மிட்சுஹாஷி 16-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.