ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி + "||" + All-India Hockey: In Final Indian Oil-Punjab National Bank

அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி

அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி
அகில இந்திய ஆக்கியின், இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோத உள்ளன.
சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 93-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இந்தியன் ஆயில் அணி 6-3 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியன் ஆயில் அணியில் தரம்விர் சிங் , தீபக் தாகூர், தல்விந்தர் சிங், ரோஷன் மின்ஸ் தலா ஒரு கோலும், அபான் யூசுப் 2 கோலும் அடித்தனர். 2-வது அரைஇறுதிப்போட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பஞ்சாப் நேஷனல் வங்கி அணியில் மன்தீப்சிங் மோர், குர்ஜிந்தர் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
சுல்தான் கோப்பை ஆக்கியின், இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
2. சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா
சுல்தான் கோப்பை ஆக்கியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.
3. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
4. உலக கோப்பை கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா
உலக கோப்பை கூடைப்பந்து போட்டி யில் ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
5. புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது
புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.