ஹாக்கி

மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றி + "||" + Chennai Super Team wins Chennai Super League round

மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றி

மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றி
மாநில ஆக்கி சூப்பர் லீக் சுற்றில் சென்னை அணி வெற்றிபெற்றது.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் முடிவில் சென்னை, மதுரை, அரியலூர், தூத்துக்குடி மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னை அணி, மதுரையை எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் மதுரையை வீழ்த்தியது. சென்னை அணியில் அப்பாஷ் அலி 2 கோலும், சுரேஷ்பாபு ஒரு கோலும் அடித்தனர். மதுரை அணியில் தனசேகரன் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் தூத்துக்குடி-அரியலூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தூத்துக்குடி அணியில் தினேஷ்குமாரும், அரியலூர் அணியில் மணிகண்டனும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தலா ஒரு கோல் அடித்தனர்.


இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் அரியலூர்-சென்னை (காலை 6.30 மணி), மதுரை-தூத்துக்குடி (காலை 8 மணி), மதுரை-அரியலூர் (பிற்பகல் 3 மணி), சென்னை-தூத்துக்குடி (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.