ஹாக்கி

பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றபோது பல்பீர் சிங் கதறி அழுததைப் பார்த்தோம் - பல்பீர் சிங் பற்றி நினைவு கூரும் முன்னாள் வீரர் அசோக் குமார் + "||" + 'Balbir Singh Sr Was Independent India's Dhyan Chand: Ashok Kumar

பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றபோது பல்பீர் சிங் கதறி அழுததைப் பார்த்தோம் - பல்பீர் சிங் பற்றி நினைவு கூரும் முன்னாள் வீரர் அசோக் குமார்

பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றபோது பல்பீர் சிங் கதறி அழுததைப் பார்த்தோம் -  பல்பீர் சிங் பற்றி நினைவு கூரும் முன்னாள் வீரர் அசோக் குமார்
பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றபோது பல்பீர் சிங் கதறி அழுததைப் பார்த்தோம் என பல்பீர் சிங் பற்றி முன்னாள் வீரர் அசோக் குமார் நினைவு கூர்ந்தார்.
புதுடெல்லி,

1971-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது பயிற்சியாளராக இருந்த பல்பீர் சிங் எப்படி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றப்போது ஹோட்டல் அறையில் உடைந்து போய் கதறி அழுதார் என்பதைப் அசோக் குமார் பகிர்ந்து கொண்டர். பல்பீர் சிங் பற்றி அசோக் குமார் கூறியதாவது:-


பல்பீர் சிங் இந்திய ஆக்கியின் பிரகாச நட்சத்திரம். அவரைப்போன்று வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம், 1971 உலகக்கோப்பையின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தோற்றபோது பல்பீர் சிங் உடைந்து போய் ஹோட்டல் அறையில் கதறி அழுததைப் பார்த்தோம், பல்பீர் ஒரு லெஜண்ட்.

என் தந்தையையும் இவரையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது சரியல்ல, இருவரும் இந்திய ஆக்கியின் ரத்தினங்கள் என்பதில் சந்தேகமில்லை.

1971 உலகக்கோப்பையில் வெண்கலம் வென்றது இந்திய அணி, அதிலும் பல்பீர் சிங் பங்களிப்புதான் பெரிது. அத்தகைய ஆக்கி மேதையான பல்பீர் இன்று நம்மிடையே இல்லை என்றார்.