லாக்டவுன் முழு ஆக்கி அணியும் ஒன்றாக இருக்க உதவியது - ஹர்மன்பிரீத் சிங்


லாக்டவுன் முழு ஆக்கி அணியும் ஒன்றாக இருக்க உதவியது - ஹர்மன்பிரீத் சிங்
x
தினத்தந்தி 28 May 2020 12:38 PM GMT (Updated: 28 May 2020 12:38 PM GMT)

லாக்டவுனில் முழு ஆக்கி அணியும் ஒன்றாக இருக்க உதவியது என ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியும், பெண்கள் ஆக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கொரோனா அச்சம் ஒரு பக்கம் கலங்கடித்தாலும் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை.

இந்தநிலையில் இந்திய ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத், தேசிய அணியின் மற்ற உறுப்பினர்களுடன் ஒன்றாக இருப்பது அனைவருக்கும் வலுவாக இருக்க உதவியது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
தி ஏஸ் ட்ராக் ப்ளிக்கர் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

இது அனைவருக்கும் ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் எங்களுக்கு உதவியது என்னவென்றால், முழு அணியும் இங்கு  (சாய்) மையத்தில் உள்ளது தான். எங்களுக்கு மனதளவில் சவாலான ஒரு நாள் கூட இல்லை, ஏனென்றால் நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்.

பல ஆண்டுகள் பழகிய மாதிரி நாங்கள் ஒரு நெருக்கமான குடும்பமாகிவிட்டோம். யாருக்காவது ஏதேனும் கவலைகள் ஏற்பட்டால் நாங்கள் அதைத் தீர்த்து அவர்களை உற்சாகமாக வைத்திருக்க முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த லாக்டவுனில் இசையும், பாட்டும் கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.


Next Story