ஹாக்கி

நரிந்தர் பத்ரா மீது விதிமீறல் எதுவும் இல்லை - வெய்ன் ஸ்னெல் + "||" + There is no infringement on Narinder Badra - Wayne Snell

நரிந்தர் பத்ரா மீது விதிமீறல் எதுவும் இல்லை - வெய்ன் ஸ்னெல்

நரிந்தர் பத்ரா மீது விதிமீறல் எதுவும் இல்லை - வெய்ன் ஸ்னெல்
நரிந்தர் பத்ரா மீது விதிமீறல் எதுவும் இல்லை என்று சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தனிநபர் நேர்மை கமிட்டியின் சேர்மன் வெய்ன் ஸ்னெல் கூறி உள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவர் நரிந்தர் பத்ரா, சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். அவர் 2016-ம் ஆண்டு சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இது சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் விதிமீறல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.ஓ.ஏ. துணைத்தலைவர் சுதான்ஷூ மிட்டல் புகார் செய்திருந்தார். இது குறித்து விசாரித்த சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தனிநபர் நேர்மை கமிட்டியின் சேர்மன் வெய்ன் ஸ்னெல், ‘அப்போதைய சட்டதிட்டத்தின்படி நரிந்தர் பத்ரா மீது விதிமீறல் எதுவும் இல்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை தேவை இல்லை’ என்று கூறியுள்ளார்.