ஹாக்கி

அர்ஜென்டினா தொடரில் பங்கேற்க இந்திய பெண்கள் ஆக்கி அணி பயணம் + "||" + Participate in the Argentina series Indian women's hockey team tour

அர்ஜென்டினா தொடரில் பங்கேற்க இந்திய பெண்கள் ஆக்கி அணி பயணம்

அர்ஜென்டினா தொடரில் பங்கேற்க இந்திய பெண்கள் ஆக்கி அணி பயணம்
இந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து 8 போட்டிகளில் விளையாடுகிறது.
புதுடெல்லி, 

அர்ஜென்டினா ஜூனியர் அணிக்கு எதிரான ஆட்டம் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளிலும், அர்ஜென்டினா ‘பி’ அணிக்கு எதிரான ஆட்டம் 22, 24 ஆகிய தேதிகளிலும், அர்ஜென்டினா சீனியர் அணிக்கு எதிரான ஆட்டம் 26, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. இந்த போட்டி தொடரில் பங்கேற்க ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றது. கொரோனா மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணியினருக்கும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா தொடருக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: சவிதா (துணை கேப்டன்), ரஜனி எதிமர்பு, பிசுதேவி ஹரிபாம், பின்களம்: குர்ஜித் கவுர், தீப் கிரேஸ் எக்கா, ரஷ்மிதா மின்ஸ், மன்பிரீத் கவுர், ரீனா கோஹர், சலிமா, நிஷா, நடுகளம்: சுஷிலா சானு, லிலிமா மின்ஸ், நேஹா கோயல், நமிதா டாப்போ, மோனிகா, நிக்கி பிரதான், முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்னீத் கவுர், நவ்ஜோத் கவுர், ஜோதி உதிதா, ராஜ்விந்தர் கவுர், லால்ரெம்சியாமி, ஷர்மிளா தேவி.