ஹாக்கி

பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா ஆட்டம் ‘டிரா’ + "||" + Women's Aggie: India-Argentina match 'draw'

பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா ஆட்டம் ‘டிரா’

பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா ஆட்டம் ‘டிரா’
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது.
பியூனஸ் அயர்ஸ், 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா, 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி தரப்பில் ராணி ராம்பால் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி வீராங்கனை எமிலியா பார்செரியோ கோல் திருப்பினார்.

அர்ஜென்டினா அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. 3-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நடந்த அர்ஜென்டினா ஜூனியர் அணிக்கு எதிரான ஆட்டங்களை 2-2, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து இருந்த இந்திய அணி 1-2, 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா ‘பி’ அணியிடம் தோல்வி கண்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
3. குன்றத்தூர் அருகே விபத்து குடிபோதையில் டிரைவர் ஓட்டிய லாரி மோதி 3 பெண்கள் பலி
குன்றத்தூர் அருகே லாரி மோதி 3 பெண்கள் பலியானார்கள். குடிபோதையில் இருந்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
4. "பெண்கள் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும்" - ராகுல்காந்தி வேண்டுகோள்
பெண்கள் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கறம்பக்குடி அருகே சேறும்-சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
கறம்பக்குடி அருகே ேசறும்-சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.