டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமனம்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமனம்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:25 AM GMT (Updated: 23 Jun 2021 12:25 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார்? என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. ‘ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பங்கேற்கும் வாய்ப்புடன், இந்த முறை கேப்டனாக களம் இறங்க இருப்பது பெருமையான தருணம்’ என்று மன்பிரீத் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story