ஹாக்கி

ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஆக்கி அணி வெற்றி + "||" + Tokyo Olympics: India Beat Japan 5-3 In Men's Hockey, Finish Second In Pool A

ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஆக்கி அணி வெற்றி

ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஆக்கி அணி வெற்றி
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி லீக் சுற்று போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். 

தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 19-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டனகா கோல் அடித்து தனது நாட்டு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 3-வது கால் பகுதியில் 33-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி ஒரு கோல் அடித்தார். 

இதனால், ஜப்பான் அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் என சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் சூடுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்திய ஆடவர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை
அடித்தனர்.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஷம்ஷர் சிங்கும், 51-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும் தலா 1 கோல் அடித்தனர். பெனால்டி கார்னர் முறை மூலம் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், இந்திய அணியில் கோல் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. 

ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் முராடா ஒரு கோல் அடித்தார். இதனால், அந்த அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
3. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் தங்கப்பதக்கம் !
கோலாகலம்.. இங்கு கொண்டாட்டம்.. என்று, உலகமே ரசித்து பார்த்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது.
4. டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...!
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனை, சுவாரஸ்யம், ஏமாற்றங்கள் பற்றிய ஒரு அலசல்.
5. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.