இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் விலகல்


இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் விலகல்
x
தினத்தந்தி 7 Aug 2021 2:57 AM GMT (Updated: 2021-08-07T08:27:57+05:30)

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 4 வருடங்களாக இருந்த 47 வயதான ஜோர்ட் மர்ஜின் (நெதர்லாந்து) அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்திய அணியினருடன் இணைந்து செயல்படுவதை தவற விடுகிறேன். நான் எனது குடும்பத்தினரை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தவற விட்டு இருக்கிறேன். தற்போது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன். இந்திய ஆக்கி அணியினருடனான அழகான பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய ஆக்கி வீராங்கனைகளின் செயல்பாடு பெருமை அளிக்கிறது. வீராங்கனைகள் பதக்கம் வெல்லாவிட்டாலும், அதனை விட பெரிதாக இந்திய மக்களின் மனதை வென்று இருக்கிறார்கள்’ என்றார்.

Next Story