ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:42 PM GMT (Updated: 26 Nov 2021 9:42 PM GMT)

டாக்காவில் நடைபெற இருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி தென்கொரியாவையும், அடுத்த ஆட்டங்களில் 15-ந் தேதி வங்காளதேசத்தையும், 17-ந் தேதி பாகிஸ்தானையும், 18-ந் தேதி மலேசியாவையும், 19-ந் தேதி ஜப்பானையும் எதிர்கொள்கிறது. 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மன்பிரீத் சிங் தொடருகிறார். கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பகதூர் பதாக், சுராஜ் கார்க்ரா, பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், குரிந்தர் சிங், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, வருண் குமார், நீலம் சன்ஜீப், மன்தீப் மோர், நடு களம்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமார் பால், ஆகாஷ்தீப் சிங், ஷம்ஷெர் சிங், முன்களம்: லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், குர்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா.

Next Story