ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Hockey unior World Cup The Indian team advanced to the semi-finals

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியின் கால்இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு அரங்கேறிய கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மல்லுக்கட்டியது. கடைசி வரை திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய வீரர் ஷர்தானந்த் திவாரி 21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிக்கான கோலை அடித்தார். பெனால்டி கார்னர் உள்பட பெல்ஜியத்தின் சில வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் பவான் கலக்கலாக முறியடித்தார்.

முன்னதாக நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி அணி, ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் குட்டெர் ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இக்னாசியோ அபாஜோ பெனால்டி கார்னர் வாய்ப்பில் பதில் கோல் திருப்பினார்.

இதன் பின்னர் 59-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் எட்வர்ட் டி இக்னாசியோ அபாரமாக கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் கிட்டிய பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜெர்மனி வீரர் மாசி பாண்ட் கோலாக்கி அசத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 4 வாய்ப்புகளில் ஜெர்மனி 3 கோல்கள் திணித்தது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில் ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும், பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. பிரான்ஸ் அணியில் கேப்டன் டிமோதி கிளமென்ட் 3 கோலும், மாதிஸ் கிளமென்ட் ஒரு கோலும் அடித்தனர்.

நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, வலுவான ஜெர்மனியை சந்திக்கிறது. மற்றொரு அரைஇறுதியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2. தாமஸ் கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு..!!
இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
3. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி..!!
14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
4. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா?
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி நடக்கிறது.
5. சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன்- பஞ்சாப் வீரர்
தன்னை 5 ஆண்டுகளாக யாரும் தேர்வு செய்யவில்லை என பிரபல வீரர் தெரிவித்துள்ளார்.