ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:03 PM GMT (Updated: 2021-12-03T04:33:31+05:30)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி அரைஇறுதி போட்டியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதுகின்றன.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, 6 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனியை சந்திக்கிறது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியதுடன் தடுப்பு ஆட்டத்தில் வலுவாக இருப்பதையும் இந்தியா நிரூபித்து காட்டியது. 

இன்றைய ஆட்டத்திலும் அத்தகைய பாணியை விவேக் சாகர் பிரசாத் தலைமையிலான இந்திய அணியினர் தொடர வேண்டியது அவசியமாகும். முன்னதாக நடைபெறும் மற்றொரு அரைஇறுதியில் பிரான்ஸ்-அர்ஜென்டினா (மாலை 4.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Next Story