‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி


‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி
x
தினத்தந்தி 27 Jun 2017 8:31 PM GMT (Updated: 27 Jun 2017 8:31 PM GMT)

‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி பெற்றனர்.

சென்னை,

சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் பிரிவு லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 25-9, 25-12 என்ற நேர்செட்டில் லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. எக்செலன்ஸ் அணி 25-17, 26-24 என்ற நேர்செட்டில் நெல்லை பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

Next Story