முதல்–அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்


முதல்–அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 21 Nov 2017 8:30 PM GMT (Updated: 21 Nov 2017 7:53 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் இந்த ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் இந்த ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் (இருபாலருக்கும்) சென்னையில் பல்வேறு மைதானங்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) 2–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை நடக்கிறது. இதில் தடகளம் மற்றும் கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்திலும், கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும் டிசம்பர் 2–ந் தேதி நடக்கிறது. கபடி போட்டி நொச்சிக்குப்பத்தில் உள்ள சிங்காரவேலர் மைதானத்தில் 2 மற்றும் 3–ந் தேதிகளில் நடைபெறுகிறது. நீச்சல் போட்டி வேளச்சேரி நீச்சல் வளாகத்திலும், டேபிள் டென்னிஸ் போட்டி நேரு ஸ்டேடியத்திலும் 3–ந் தேதி நடக்கிறது. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்திலும், கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்திலும் 4–ந் தேதி நடைபெறுகிறது. ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும், பேட்மிண்டன் போட்டி ஷெனாய்நகர் உள்விளையாட்டு அரங்கிலும் 5–ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் 1–1–1997–க்கு பிறகு பிறந்தவர்களும், சென்னையில் பிறந்தவர்கள், படிப்பவர்கள் மற்றும் வேலைபார்ப்பவர்கள் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தலா ரூ.1,000, ரூ.750, ரூ.500 பரிசாக வழங்கப்படும். அத்துடன் முதலிடத்தை பிடிக்கும் வீரர்கள் மற்றும் அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story