பிற விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி. அணி ‘சாம்பியன்’ + "||" + State Volleyball Competition

மாநில கைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி. அணி ‘சாம்பியன்’

மாநில கைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி. அணி ‘சாம்பியன்’
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது, மாநில கைப்பந்து போட்டி ஐ.ஓ.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே.குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) அணி 25-19, 25-21, 25-15 என்ற நேர் செட்டில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி 25-19, 25-16 என்ற நேர் செட்டில் சுங்க இலாகாவை வீழ்த்தியது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.ஜே. குரூப் நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், துணைத்தலைவர் பாலசந்திரன், சென்னை மாவட்ட தலைவர் ஆர்.அர்ஜூன்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.