பிற விளையாட்டு

தொழில்முறை குத்துச்சண்டையில் அமுஜூவை தோற்கடித்தார்: விஜேந்தர் தொடர்ந்து 10–வது வெற்றி இரட்டை பட்டத்தை தக்கவைத்தார் + "||" + Vijender is the 10th winner Retained the double title

தொழில்முறை குத்துச்சண்டையில் அமுஜூவை தோற்கடித்தார்: விஜேந்தர் தொடர்ந்து 10–வது வெற்றி இரட்டை பட்டத்தை தக்கவைத்தார்

தொழில்முறை குத்துச்சண்டையில் அமுஜூவை தோற்கடித்தார்: விஜேந்தர் தொடர்ந்து 10–வது வெற்றி இரட்டை பட்டத்தை தக்கவைத்தார்
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு பந்தயத்தில் ஆப்பிரிக்க சாம்பியனான கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் கோதாவில் இறங்கினார்.

ஜெய்ப்பூர்,

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு பந்தயத்தில் ஆப்பிரிக்க சாம்பியனான கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் கோதாவில் இறங்கினார். இது 10 ரவுண்ட் கொண்ட போட்டியாகும். ஒவ்வொரு ரவுண்டும் 3 நிமிடங்கள் கொண்டது. இருவரும் தொடக்கத்தில் எச்சரிக்கை பாணியை கையாண்டனர். போக போக இருவரும் குத்துகளை விட்டனர். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு விஜேந்தர் சிங்குக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. நாக்–அவுட் செய்வேன் என்று இருவரும் சூளுரைத்து இருந்தனர். ஆனால் அந்த மாதிரி இல்லாமல் கடைசி வரை சளைக்காமல் இருவரும் மல்லுகட்டினர். என்றாலும் விஜேந்தரின் கையே ஓங்கி இருந்தது.

10 ரவுண்ட் முடிவில் நடுவர்கள் ஒருமித்த தீர்ப்பாக 32 வயதான விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். தொழில் முறை குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் 9 பந்தயங்களில் வெற்றி பெற்றிருந்த விஜேந்தர் அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் விஜேந்தர்சிங் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் ஆகிய பட்டங்களை தக்க வைத்துக் கொண்டார். அதே சமயம் 26–வது ஆட்டத்தில் விளையாடிய எர்னெஸ்ட் அமுஜூக்கு இது 3–வது தோல்வியாகும்.