பிற விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு + "||" + Wrestler On Sushil kumar Prosecutions

மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு

மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு
பர்வீன் ராணாவின் சகோதரர் மீது தாக்குதல், மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு.
புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த வீரர்களை தேர்வு செய்ய தகுதி சுற்று போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தகுதி சுற்றின் அரைஇறுதியில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான சுஷில்குமார், பர்வீன் ராணாவை வீழ்த்தினார். அப்போது ராணா தன்னை கடித்ததாக சுஷில்குமார் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆட்டம் முடிந்ததும் அரங்கத்திற்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பர்வீன் ராணாவின் சகோதரர் நவீன் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்தார். பர்வீன் ராணா காயமின்றி தப்பினார்.

இது குறித்து பர்வீன் ராணா டெல்லி போலீஸ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்து தாக்குதல், காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுஷில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.