இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்


இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 1 Feb 2018 9:00 PM GMT (Updated: 1 Feb 2018 7:58 PM GMT)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில்

புதுடெல்லி,

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரிகோம் 4–1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி காபுகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 64 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை விலோ பசுமதாரி 3–2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீராங்கனை சுடபோர்னை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹேன் தங்கப்பதக்கமும், மற்ற இந்திய வீராங்கனைகளான சரிதாதேவி, சவீட்டி பூரா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

ஆண்களுக்கான 91 கிலோ எடைபிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 3–2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் சான்ஜர் துர்சுனோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் மனிஷ் கவுசிக் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்ற இந்திய வீரர்களான சதீஷ்குமார், தினேஷ் தாகர், தேவன்சு ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர்.


Next Story