ஆசிய மல்யுத்த போட்டி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப்பதக்கம் வென்றார்


ஆசிய மல்யுத்த போட்டி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 1 March 2018 9:00 PM GMT (Updated: 1 March 2018 8:49 PM GMT)

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 50 கிலோ உடல் எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், சீன வீராங்கனை சுன் லிய்யை சந்தித்தார். இதில் வினேஷ் போகத் 2–3 என்ற புள்ளி கணக்கில் சுன் லிய்யிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. அரியானாவை சேர்ந்த 23 வயதான வினேஷ் போகத் தொடர்ச்சியாக 2–வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதன் 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சங்கீதா வெண்கலப்பதக்கம் வென்றார். முன்ன

பிஷ்கெக்,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 50 கிலோ உடல் எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், சீன வீராங்கனை சுன் லிய்யை சந்தித்தார். இதில் வினேஷ் போகத் 2–3 என்ற புள்ளி கணக்கில் சுன் லிய்யிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. அரியானாவை சேர்ந்த 23 வயதான வினேஷ் போகத் தொடர்ச்சியாக 2–வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதன் 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சங்கீதா வெண்கலப்பதக்கம் வென்றார்.

முன்னதாக நடந்த ஆண்களுக்கான கிரிகோ–ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் ஹர்பிரீத்சிங் (82 கிலோ), ராஜேந்தர்குமார் (55 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்கள். இந்த போட்டியில் இதுவரை இந்தியா 4 பதக்கங்கள் வென்றுள்ளது.


Next Story