பிற விளையாட்டு

தேசிய பீச் வாலிபால் போட்டி சென்னையில் நாளை தொடக்கம் + "||" + National Beach Volleyball Competition Starting tomorrow in Chennai

தேசிய பீச் வாலிபால் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

தேசிய பீச் வாலிபால் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
18–வது தேசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

வாலிஸ் கிளப் சார்பில் வேலம்மாள் கல்வி குழுமம் ஆதரவுடன் 18–வது தேசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆந்திரா, பீகார், சத்தீஷ்கார், டெல்லி, கோவா, குஜராத், ஜம்மு–காஷ்மீர், கேரளா, மராட்டியம், ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 ஆண்கள் அணிகளும், 30 பெண்கள் அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டி ‘லீக்’ மற்றும் ‘நாக்–அவுட்’ முறையில் நடத்தப்படுகிறது. சாம்பியன் மற்றும் 2–வது இடம் பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.