உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ரிஸ்வி தங்கப்பதக்கம் வென்று அசத்தல் ஜிதுராய், மெகுலி வெண்கலம் கைப்பற்றினர்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ரிஸ்வி தங்கப்பதக்கம் வென்று அசத்தல் ஜிதுராய், மெகுலி வெண்கலம் கைப்பற்றினர்
x
தினத்தந்தி 4 March 2018 9:30 PM GMT (Updated: 4 March 2018 9:08 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் கடலாஜாராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஷாஜர் ரிஸ்வி 242.3 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதில் இலக்கை நோக்கி 24 ரவுண்ட் சுட வேண்டும். 14–வது ரவுண்டில் இருந்து முன்னிலை பெற்ற ரிஸ்வி, ஒலிம்பிக் சாம்பியன் கிறிஸ்டியன் ரீட்சை (ஜெர்மனி) பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த முன்னிலையை கடைசிவரை தக்கவைத்துக் கொண்டார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ரிஸ்வி களம் கண்ட முதல் உலக கோப்பை போட்டி இது தான். ஜெர்மனி

புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் கடலாஜாராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஷாஜர் ரிஸ்வி 242.3 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதில் இலக்கை நோக்கி 24 ரவுண்ட் சுட வேண்டும். 14–வது ரவுண்டில் இருந்து முன்னிலை பெற்ற ரிஸ்வி, ஒலிம்பிக் சாம்பியன் கிறிஸ்டியன் ரீட்சை (ஜெர்மனி) பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த முன்னிலையை கடைசிவரை தக்கவைத்துக் கொண்டார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ரிஸ்வி களம் கண்ட முதல் உலக கோப்பை போட்டி இது தான்.

ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் 239.7 புள்ளிகளுடன் 2–வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் ஜிது ராய் 219 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கமும் வசப்படுத்தினர். இன்னொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 198.4 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் ருமேனியாவின் லாரா ஜார்ஜெட்டா (251.5 புள்ளி) தங்கமும், சீனாவின் சூ ஹாங் (251 புள்ளி) வெள்ளியும் வென்றனர். 228.4 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்த 17 வயதான இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்ஜில், அபூர்வி சண்டேலா ஏமாற்றம் அளித்தனர்.

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்ததால் உற்சாகம் அடைந்துள்ள தேசிய ரைபிள் சங்க தலைவர் ரனிந்தர்சிங், ‘நாங்கள் இளைஞர்கள் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. உன்னதமான செயல்பாடு இது. குறிப்பாக ரிஸ்வி தனது முதலாவது சீனியர் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்றதுடன் உலக சாதனை ஸ்கோரையும் பெற்று இருக்கிறார். மெகுலி இன்னும் இளம் வீராங்கனை தான். ஆனால் சீனியர் அளவில் வியக்கத்தக்க சாதனையை படைத்திருக்கிறார்’ என்றார்.


Next Story