பிற விளையாட்டு

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா? - மேரிகோம் + "||" + Relax from boxing? - Mary kom

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா? - மேரிகோம்

குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா? - மேரிகோம்
குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா என மேரிகோம் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை புயல் மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். 5 முறை உலக சாம்பியனான மேரிகோம் ஏற்கனவே ஒலிம்பிக், ஆசிய விளையாட்டிலும் பதக்கம் வென்றுள்ளார். 35 வயதான அவர் இத்துடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை மேரிகோம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 3 குழந்தைகளின் தாயான மேரிகோம் நேற்று அளித்த பேட்டியில், ‘ஓய்வு குறித்து நான் ஒரு போதும் பேசவில்லை. இது வதந்தி. இந்த தகவலை கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. என்னை பொறுத்தவரை வயது ஒரு பிரச்சினையே கிடையாது. எனது உடல் எவ்வளவு காலம் ஒத்துழைக்கும் என்பதை அறிவேன். வெற்றி, தோல்விக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் நான் பயிற்சியில் இருக்கும் போது, என்னை யாராலும் எளிதில் வீழ்த்தி விட முடியாது’ என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை