பிற விளையாட்டு

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்கு விருது + "||" + National and international competition Award for players who have achieved

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்கு விருது

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்கு விருது
சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை, 

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க விருது வழங்கும் விழா சென்னை அண்ணாநகரில் நடந்தது. இதற்கு சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க செயலாளர் எஸ்.அரவிந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்–வீராங்கனைகளுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி கவுரவித்தார். இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற கரண்ராஜன், சங்கர் முத்துசாமி ஆகியோர் பெற்றனர். சித்தார்த் குப்தா, ரித்விக் சஞ்சீவி, அனிருத், பிரணவி, பயிற்சியாளர் எஸ்.அரவிந்தன் உள்பட 12 பேர் விருது மற்றும் ஊக்கத்தொகையை பெற்றனர். முன்னதாக சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க துணைத்தலைவர் கே.ராஜராஜன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை