பிற விளையாட்டு

முதல்–அமைச்சர் கோப்பை தடகளம்: பெண்கள் பிரிவில் சென்னை அணி ‘சாம்பியன்’ + "||" + Chief-Minister Cup Athletic: Women's section Chennai team 'champion'

முதல்–அமைச்சர் கோப்பை தடகளம்: பெண்கள் பிரிவில் சென்னை அணி ‘சாம்பியன்’

முதல்–அமைச்சர் கோப்பை தடகளம்: பெண்கள் பிரிவில் சென்னை அணி ‘சாம்பியன்’
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.

சென்னை, 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருவள்ளூர் வீரர் எஸ்.ரிஷ்வாந்த் முதலிடமும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மதுரை வீரர் சந்தோஷ் முதலிடமும், நீளம் தாண்டுதலில் சென்னை வீரர் விஷ்ணு முதலிடமும் பிடித்தனர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீதாவும் (சென்னை), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யாவும் (கோவை), 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யாவும் (ஈரோடு), நீளம் தாண்டுதலில் ஹர்ஷினியும் (சென்னை), உயரம் தாண்டுதலில் கிரேஸ் நாக்மெர்லியும் (கன்னியாகுமரி), குண்டு எறிதலில் கீர்த்திகாவும் (தஞ்சாவூர்) முதலிடமும் பெற்றனர். இதன் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்டம் 25 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நெல்லை (10 புள்ளிகள்) 2–வது இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சென்னை மாவட்ட அணி (20 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை வென்றது. ஈரோடு மாவட்ட அணி (11 புள்ளிகள்) 2–வது இடம் பெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், 2–வது இடம் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 3–வது இடம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
2. திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3. சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
திருவாரூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கூட்டுறவு வாரவிழா: 1,352 பேருக்கு ரூ.17¼ கோடி கடன் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்
கூட்டுறவு வார விழாவையொட்டி 1,352 பேருக்கு ரூ.17¼ கோடி கடன் உதவியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.
5. கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.