பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு + "||" + Asian Games Contest

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு
சமீபகாலமாக தென்கொரியா, வடகொரியா இடையே நிலவிய பகைமை மாறி நட்பு அதிகம் துளிர்த்து வருகிறது. தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஆக்கி போட்டியில் இரு கொரியா அணியினரும் இணைந்து ஒரே அணியாக கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் தென்கொரியா மற்றும் வடகொரியாவினர் ஒரு சில போட்டிகளில் ஒரே அணியாக இணைந்து செயல்படவும், தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஒன்றாக இணைந்து ‘கொரியா’ என்ற பெயரில் ஒரே கொடியுடன் அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். 

இதனை இரு நாடுகளும் நேற்று கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன. அத்துடன் வரும் சர்வதேச போட்டிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், கூட்டாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனையின் தாயார் செயின் பறிப்பு சம்பவத்தில் சுயநினைவு இழந்துள்ளார்.
2. ஹிமா தாசுக்கு கவுரவம்
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.
3. ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை
ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை என குறைகூறி வீராங்கனை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi
5. தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி
தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரரின் தந்தை இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...