பிற விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி + "||" + Malaysia Open Badminton: Sindhu in the first round, Srikanth wins

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றனர்.
கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.