பிற விளையாட்டு

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனாய் தோல்வி + "||" + Indonesia Open Badminton: At the end of the quarter Sindhu

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனாய் தோல்வி

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனாய் தோல்வி
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா,

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-21, 15-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 17-21, 18-21 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சீன வீரர் ஷி யுகியிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.