தேசிய பேட்மிண்டன் போட்டி: தமிழக வீரர் சங்கர் ‘சாம்பியன்’


தேசிய பேட்மிண்டன் போட்டி: தமிழக வீரர் சங்கர் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 30 July 2018 10:30 PM GMT (Updated: 2018-07-31T01:59:14+05:30)

15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் ‘சாம்பியன்’பட்டம் வென்றுள்ளார்.

சென்னை, 

15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சங்கர், முதல் நிலை வீரரான பிரணவ் ராவ் காந்தமை (தெலுங்கானா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சங்கர் 21-18, 21-11 என்ற நேர்செட்டில் பிரணவ் ராவ் காந்தமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தேசிய ரேங்கிங் போட்டியில் தமிழக வீரர் சங்கர் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார். சங்கர் சென்னை முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

Next Story