பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு பிரிட்ஜ் போட்டியில் ஆடவர் இந்திய இணை தங்கம் வென்றது + "||" + Pranab-Shibhnath win bridge gold for India in Asian Games

ஆசிய விளையாட்டு பிரிட்ஜ் போட்டியில் ஆடவர் இந்திய இணை தங்கம் வென்றது

ஆசிய விளையாட்டு பிரிட்ஜ் போட்டியில் ஆடவர் இந்திய இணை தங்கம் வென்றது
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடந்த பிரிட்ஜ் போட்டியில் ஆடவர் இந்திய இணை தங்கம் வென்றது.
இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டு போட்டியின் இன்று பிரிட்ஜ் போட்டி எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பிரணாப் பர்தான் (வயது 60) மற்றும் ஷிப்நாத் சர்கார் (வயது 56) ஆகியோர் இறுதி போட்டியில் 384 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தினை பிடித்தனர்.  அவர்களுக்கு தங்க பதக்கம் கிடைத்தது.

சீன இணையான லிக்சின் யாங் மற்றும் காங் சென் ஆகியோர் 378 புள்ளிகளுடன் 2வது இடத்தினை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.  இந்தோனேசியாவின் ஹெங்கி லசூட் மற்றும் பிரெட்டி எட்டி மனோப்போ இணை 374 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

இதேபோன்று மற்றொரு இந்திய இணையான சுமித் முகர்ஜி மற்றும் தேபப்ராடா மஜும்தர் 333 புள்ளிகள் எடுத்து 9வது இடம் பிடித்தனர்.