பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி 2–வது சுற்றுக்கு தகுதி + "||" + Japan Open Badminton: Indian pair qualify for 2nd round

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி 2–வது சுற்றுக்கு தகுதி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி 2–வது சுற்றுக்கு தகுதி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ, 

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 15–21, 23–21, 21–19 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கோக் ஷெம்–தான் வி கியோங் (மலேசியா) இணையை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 54 நிமிட நேரம் நடந்தது. மற்றொரு ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறியது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அஸ்வினி பொன்னப்பா–சிக்கி ரெட்டி இணை தோல்வி கண்டு நடையை கட்டியது.


ஆசிரியரின் தேர்வுகள்...