பிற விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம் + "||" + Pro kabaddi league match start date change

புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம்

புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம்
புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது.

‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் கொச்சியில் டிசம்பர் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போட்டியை நடத்தும் மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை