ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: கால்இறுதியில் ருத்விக், நவ்மி


ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: கால்இறுதியில் ருத்விக், நவ்மி
x
தினத்தந்தி 26 Sep 2018 9:00 PM GMT (Updated: 26 Sep 2018 8:54 PM GMT)

25–வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

சென்னை, 

25–வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. இதில் 19 வயதுக்குட்டோருக்கான ஆண்கள் பிரிவில் நேரடியாக 2–வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீரர் ருத்விக் ராவ் 11–6, 11–1, 11–3 என்ற செட் கணக்கில் பெஷாந்த் ஸ்ரீ நாகேசை (மலேசியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். உத்கர்ஷ் பஹெதி, துஷார் ‌ஷஹனி ஆகிய இந்தியர்களும் அடுத்த சுற்றை எட்டினர். அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் ராகுல் பாய்தா 7–11, 7–11, 9–11 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் அப்பாஸ் ஸிப்பிடம் தோல்வி அடைந்தார். இதன் பெண்கள் பிரிவில் களம் இறங்கிய 4 இந்தியர்களில் நவ்மி ‌ஷர்மா தவிர மற்ற 3 பேரும் 2–வது சுற்றுடன் நடையை கட்டினர். நவ்மி ‌ஷர்மா 11–6, 11–2, 11–6 என்ற நேர் செட்டில் இலங்கையின் கிரா மரி குருகேவை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தார். 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் நீல் ஜோஷி, பிரித்வி சிங், யாஷ் பாத்தே, 15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஐஸ்வர்யா, யுவ்னா குப்தா, அபிஷிகா ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர்.


Next Story