பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா அபாரம் + "||" + Chess Olympiad: India is great

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா அபாரம்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா அபாரம்
43–வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது.

பாதுமி, 

43–வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவை சந்தித்தது. சாதுர்யமாக செயல்பட்ட இந்தியா 3.5–0.5 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராதி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். மற்றொரு இந்திய வீரர் அதிபன், பீட்டர் ஸ்கிரீனெருடன் டிரா செய்தார். இந்திய ஆண்கள் அணி அடுத்து கனடாவை எதிர்கொள்கிறது. பெண்கள் பிரிவில் இந்தியா 4–0 என்ற கணக்கில் வெனிசுலாவை சாய்த்தது.


அதிகம் வாசிக்கப்பட்டவை