பிற விளையாட்டு

போட்டியில் டுட்டீ கெட்டி! + "||" + Tutti Getty in the competition!

போட்டியில் டுட்டீ கெட்டி!

போட்டியில் டுட்டீ கெட்டி!
நூறு மீட்டர் ஓட்டப் போட்டியில் தான் கெட்டி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் இந்திய தட களப் புயல் டுட்டீ சந்த், தனது அடுத்த கட்டம் குறித்துப் பேசுகிறார்...
‘‘இரண்டாண்டு காலத்தில் நான் எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய போட்டி ஒலிம்பிக் என்றாலும், அதற்காக சிறப்புப் பயிற்சி எதுவும் பெறுவதா என்று இதுவரை நாங்கள் திட்டமிடவில்லை. முதலாவதாக, ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெற வேண்டும். அதன் பின்னர்தான், இந்தியா விலேயே பயிற்சி செய்வதா அல்லது வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி பெறுவதா என்று முடிவு செய்வோம். அடுத்த ஆண்டிலேயே ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப் போன்றவை இருக்கின்றன. இப்போதைக்கு நான் அவற்றில் கவனம் செலுத்துகிறேன்’’ என்கிறார்.

ஆசிய தடகள வட்டாரத்தில் டுட்டீ போட்டியில் கெட்டி என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் தனது செயல்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை.

கடந்த ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிக்கு டுட்டீ கடைசி நேரத்தில் தகுதி பெற்றாலும், 11.69 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்தவர், ஆரம்ப சுற்றைத் தாண்டவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11.32 வினாடிகளில் இவர் ஓடியது முன்னேற்றம் என்றாலும், தனது தேசிய சாதனையான 11.24-ஐ தகர்க்கவில்லை. பந்தய நேரத்தைக் குறைப்பதே டுட்டீயின் இலக்காக இருக்கிறது.

‘‘நான் இதுவரை வெளிநாட்டில் பயிற்சி பெற்றதில்லை. எனவே ஒலிம்பிக் போட்டிக்கு எப்படித் தயாராவது என்று எனக்குத் தெரியவில்லை. புலேலா கோபிசந்த் பவுண்டேஷன் தற்போது எனக்காக 10 பேர் அடங்கிய ஒரு குழுவை வழங்கியிருக்கிறது. அதில் ஒரு மேலாளர், தனிப்பட்ட பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். அது எனக்கு மிகவும் அனுகூலமான விஷயம். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டரை 11.10 வினாடிகளில் ஓடுவது எனது இலக்கு. ஆசிய விளையாட்டுக்காக நான் 11.25 வினாடியைக் குறிவைத்துப் பயிற்சி செய்துவந்தேன். போட்டியின்போது அதை நெருங்கி வந்தேன். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் இரண்டாண்டு இருக்கும் நிலையில், நானும் வெளிநாட்டில் பயிற்சி பெறுவேன். அப்போது நான் மேலும் முன்னேற்றம் காண முடியும்’’ என்று விலா வரியாகக் கூறுகிறார்.

தனது முயற்சிக்கு தன்னுடைய ஒடிசா மாநில அரசாங்கமும் மத்திய அரசும் கைகொடுக்கும் என்பது டுட்டீ சந்தின் நம்பிக்கை! 

அதிகம் வாசிக்கப்பட்டவை