பிற விளையாட்டு

து ளி க ள் + "||" + Drops

து ளி க ள்

து ளி க ள்
3வது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவில் நடக்கிறது.

* 3-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவில் வருகிற 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானுபாகெர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* கோலாலம்பூரில் நேற்று நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் போராடி தோற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்கொரியா அணி 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் 37 வயதான முகமது ஹபீஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி - வெள்ளிப்பதக்கம் வென்றது
இளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன.
2. இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்.
3. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்
இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்.
4. இளையோர் ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்
இளையோர் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
5. இளையோர் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்
இளையோர் ஒலிம்பிக் போட்டியின், துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம் வென்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை