து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 20 Nov 2018 9:00 PM GMT (Updated: 20 Nov 2018 8:43 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா, இந்திய தொடருடன் விலகினார்.

* நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியா காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 8–வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 38–வது நகர்த்தலில் டிரா கண்டார். முந்தைய 7 சுற்றுகளும் டிரா ஆனதால் எஞ்சிய 4 சுற்றுகள் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

*வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா, இந்திய தொடருடன் விலகினார். இதையடுத்து பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிக் போத்தாஸ் (தென்ஆப்பிரிக்கா) வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பில் நாளை மறுதினம் தொடங்கும் 3–வது டெஸ்டுக்கான இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா ஆடவில்லை. அவரது பந்து வீச்சு முறை சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் கூறியதால், அது தொடர்பான சோதனைக்காக பிரிஸ்பேனுக்கு செல்கிறார். அவருக்கு பதிலாக புதுமுக சுழற்பந்து வீச்சாளர் 21 வயதான நிஷான் பெய்ரிஸ் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

*இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, புனேயில் இன்று நடக்கும் 35–வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி– ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.


Next Story