பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் யாரும் தங்களது வயதை ஏமாற்றி கலந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த வீரர், வீராங்கனைகள் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

* இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டித் தொடரை முதல்முறையாக வெல்ல வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கமாகும். அது பற்றி தான் எல்லோரும் கவனம் செலுத்தி வருகிறோம். தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.
தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.
2. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த அஸ்வின், ஷமி!
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
5. இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலம்: டிச.25-ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே மேம்பாலமான போகிபீல் மேம்பாலம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை