பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) 2020-ம் ஆண்டு 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.
* 6-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 92-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) 36-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை பதம் பார்த்து 13-வது வெற்றியை சுவைத்தது. புரோ கபடியில் குஜராத் அணியை மும்பை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 35-24 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.


* பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

* 24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) 2020-ம் ஆண்டு 12 நகரங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டியில் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. இதில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் ஒரே பிரிவில் (சி) இடம் பெற்றுள்ளன. ‘எப்’ பரிவில் ஸ்பெயின், சுவீடன் உள்பட 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. உலக சாம்பியன் பிரான்சுடன் ஐஸ்லாந்து, துருக்கி உள்பட 6 அணிகள் (எச்) உள்ளன. தகுதி சுற்று போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது.

* “ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு பயணத்திலும் நிறைய கற்றுக்கொள்கிறேன். கடந்த ஆஸ்திரேலிய பயணத்தில் நான் கணிசமாக ரன்கள் குவித்தேன். அதனால் இந்தமுறை யாருக்காகவும் எதையும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. களத்தில் எனது 100 சதவீத பங்களிப்பை அளிப்பதில் மட்டுமே முழு கவனமும் செலுத்தி வருகிறேன்” என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது
24 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.