பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பை அணி அதிர்ச்சி தோல்வி + "||" + Pro Kabaddi: Shock defeat for the Mumbai team

புரோ கபடி: மும்பை அணி அதிர்ச்சி தோல்வி

புரோ கபடி: மும்பை அணி அதிர்ச்சி தோல்வி
6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124–வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது.

கொல்கத்தா, 

6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124–வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34–32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7–வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32–32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.